New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் 22 வயது நபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த 18 வயது நபர் கைது

05/28/2019

கனடாவில் 22-வயது நபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த 18-வயது நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

RCMP தகவலின் படி , இவர் மூலமாக மே - 20 அன்று 22-வயது Langruth, நபர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், இது தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வந்த பொலிஸார் தற்போது, 18-வயது (லாரண்ட் பௌலீயு) Laurent Beaulieu, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.