New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் சிறிய ரக விமானம் விபத்து இருவருக்கு நேர்ந்த பரிதாபம்

05/28/2019

கனடாவில் சிறிய ரக விமானத்தில் விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர்.

இதில், குறித்த விபத்து கனடாவின் யுகான் பகுதியில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் இடம் பெற்றதாக பொலிஸாருக்கு நள்ளிரவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்து வந்த பொலிஸார் உயிரிழந்த நிலையில் இரண்டு நபர்கள் இருப்பதை கண்டனர்.

இருப்பினும், அவர்கள் குறித்த எந்த தகவலும் பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை. மேலும், நொறுங்கிய நிலையில் கிடந்த சிறிய ரக விமானத்தின் இயந்திரம் துண்டுகளை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.