New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் சமீபத்தில் அரங்கேறிய கொலை தொடர்பில் 22 வயது நபர் கைது பொலிஸார் தீவிர விசாரணை

05/29/2019

கனடாவில் சமீபத்தில் அரங்கேறிய கொலை தொடர்பில் ஒட்டாவா பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பில், 24-வயது Mouhamed Serhan என்பவர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான காயங்களுடன் நள்ளிரவு வேளையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில்,,அவர்க்கு தீவிர சிகிக்சை அளிக்கப்படத்தின் படி சிகிக்சை பலனின்றி மருத்துவமனையில் அவர் உயிர் இழந்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பில் 22-வயது (Idris Ismail) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில், குறித்த நபர் இரண்டாவது கொலை குற்றச்சாட்டினை எதிர் கொள்கிறார்.

 

ஒட்டாவாவின் தெற்கில் உள்ள ஹெய்டிங்டன் சாலையில் நள்ளிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூடு, குறித்த பகுதியின் 7-வது கொலை சம்பவவமாக பதிவு செய்யப்பட்டது. மேலும், 2019 -ஆம் ஆண்டின் 27-வது துப்பாக்கி சூடாகும்.

இந்நிலையில், முக்கிய குற்ற பிரிவு இது தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுத்து வருகின்றது.