New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் விபத்தில் சிக்கிய 4 வயது சிறுவன் உயிர் பிழைக்க பொது மக்கள் பிராத்தனை

05/30/2019

கனடாவில், மோட்டர் சைக்கிளினால் மோதுண்ட நான்கு வயதுச் சிறுவன் தலை பகுதியில் அதிக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

அவர் உயிர் பிழைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் பிராத்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனடாவின், விக்டோரியா பார்க் அவென்யூ மற்றும் அடைய்ர் வீதிப் பகுதியில் தனது குடும்பத்தாருடன் நடந்து சென்று கெர்ணடிருந்த றாடியுல் செளத்ரி எனப்படும் அந்தச் சிறுவன் மீது மோதிய உந்துருளி, சம்பவ இடத்தில் நிற்காது தப்பிச் சென்றுள்ளது.

விபத்தினை அடுத்து குறித்த அந்த மோட்டார் சைக்கிள் சிறிது நேரம் நின்றதாகவும், அதன் ஆண் ஓட்டுனருடன் பயணித்த பெண் ஒருவர் அதிலிருந்து இறங்கி கால்நடையாக அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், அதனைத் தொடர்ந்து உந்துருளியும் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதில், குறித்த சிறுவன் தலை மற்றும் உடம்பு பகுதியில் அதிக காயங்களுடன் உள்ளூர் SickKids மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

 

இவ்வாறான நிலையில் விசாரணைகளை முன்னெடுத்துவந்த ரொறன்ரோ பொலிஸார் பிற்பகல் 31 வயது ஆண் ஒருவரைக் கைது செய்து, அவர் மீது 3 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் உயிர் ஆபத்தான நிலையில் சிகிக்சை பெற்று வரும் சிறுவனுக்கு அந்த பகுதி மக்கள் விசேஷ பிராத்தனை நடத்தி வருகின்றனர்.,