New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் எட்மன்டன் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு ஒருவர் காயம்

05/30/2019

கனடாவின் எட்மன்டனில், இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே இன்று (வியாழக்கிழமை) அதி காலை இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

26 வயதான இளைஞன் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இதன் போது படுகாயமடைந்த 32 வயதான ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.