New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவின் வடகிழக்கு தொழில்துறை பூங்காவில் கடும் தீ விபத்து மூன்று வாகனங்கள் கடுமையாக சேதம்

05/30/2019

கனடாவின் வடகிழக்கு தொழில்துறை பூங்காவில் மாலை வேளையில் தீ விபத்து ஏற்பட்டதில் பல வாகனங்கள் கடுமையாக சேதமடைந்தன.

இது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு நள்ளிரவு வேளையில் தகவல் தெரிவிக்கப்பட்டதின் படி சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதில், அந்த பூங்காவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் தீ பிடித்து எரிந்ததில் கடுமையாக சேதம் அடைந்தது.

 

.இருப்பினும், இது தொடர்பில் வேறு எவருக்கும் எந்த விதமான காயம் ஏற்படவில்லை. மேலும், இது தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.