New year offer 2017

கனடா செய்திகள்

பொபினியில் தீ விபத்து தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்ட ஐவர் கொண்ட குடும்பம்

07/08/2019

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பொபினியில் இடம்பெற்ற தீ விபத்தில், ஐவர் கொண்ட குடும்பம் ஒன்றை காப்பாற்றியுள்ளனர்.

இன்று ஜூலை 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொபினியின் Avenue Jean-Jaurès வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றிலேயே தீ பரவியுள்ளது.

அதிகாலை 3:30 மணிக்கு தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். எட்டு அடுக்குகள் கொண்ட கட்டிடத்தின் எட்டாவது தளத்திலேயே தீ பரவியுள்ளது.

12 தீயணைக்கும் இயந்திரத்தினால் தீ துரிதமாக அணைக்கப்பட்டது. தவிர தீக்குள் சிக்கிக்கொண்ட ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினர்களை தீயணைப்பு படையினர் தங்களது துரிதமான நடவடிக்கையினால் காப்பாற்றியுள்ளனர். காலை 5:30 மணிக்கு தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது.