New year offer 2017

கனடா செய்திகள்

கனடா தினம் கொண்டாட்டம் கண்ணீர் மல்க குடியுரிமை உறுதிமொழி எடுத்துக்கொண்ட வெளிநாட்டவர்கள்

07/09/2019

வெவ்வேறு சர்வதேச நாடுகளில் இருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்து கனேடிய குடியுரிமை பெற்றுக்கொண்ட மக்கள் பலர், கனடா தினத்தை முன்னிட்டு கண்ணீர் மல்க குடியுரிமை உறுதிமொழி எடுத்துக் கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நாடளாவிய ரீதியாக கனடா தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்து குடியுரிமை பெற்றுக் கொண்ட 52 ’புதிய கனேடியர்கள்’ தங்கள் வலது கையை உயர்த்தி குடியுரிமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அந்த வகையில், இந்தியாவிலிருந்து 2015-ஆம் ஆண்டளவில் கனடாவுக்கு புலம்பெயர்ந்த பிவ்யா என்பவரின் கணவர் கனடா சென்று 9 ஆண்டுகள் கழிந்த நிலையில், கடந்த ஆண்டு தான் தனது கனேடிய குடியுரிமையை பெற்றுக் கொண்டதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

கால்கரி விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிவ்யா ஜோர்ஜ் (Bivya George) என்ற பெண் இந்த நிகழ்வு தனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தானும் இப்போது கனடா குடியுரிமை பெற்றுள்ளதால், கனடாவை தனது சொந்த நாடு என அழைக்க வாய்ப்பு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.