New year offer 2017

கனடா செய்திகள்

வெப்பநிலையைச் சமாளிக்க காலநிலை மாற்ற குழு கடும் எச்சரிக்கை

07/10/2019

அதிகரித்து வரும் வெப்பநிலையின் தாக்கத்தைச் சமாளிக்க பிரித்தானிய அரசாங்கம் தயாராகவில்லை என அரசாங்க காலநிலை ஆலோசகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெப்ப மயமாதலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் உறுதியளித்துள்ள நிலையான 2C வெப்பநிலை உயர்வுக்கு இங்கிலாந்து தயாராகவில்லை என காலநிலை மாற்றம் குறித்த குழு தெரிவித்துள்ளது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கத்திடம் விரிவான திட்டம் இல்லை எனவும் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் தீவிரமான புதிய கொள்கைகள் வரையப்படாவிட்டால் இலக்குகள் பூர்த்தி செய்யப்படாது எனவும் இக்குழு எச்சரித்துள்ளது.

கடந்த 2050-ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை நிகர பூஜ்ஜியமாகக் குறைக்கும் இலக்கைத் தவறவிட்டால் அது அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் பெரும் அவமானமாக அமையுமென இக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் குறித்த குழுவின் வருடாந்த அறிக்கை அதன் காலநிலை மாற்ற இலக்குகள் தொடர்பாக அரசாங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பிரதிபலிக்கிறது.

கார்பன் உமிழ்வை நிகர பூஜ்ஜியமாகக் குறைக்கும் இலக்கை சட்டமாகும் முதல் நாடாக பிரித்தானியா இருக்குமென பிரதமர் தெரேசா மே கடந்த மாதம் இடம் பெற்ற G7 மாநாட்டில் உறுதியளித்திருந்தார்.

பிரதமரால் உறுதியளிக்கப்பட்டதன் படி, ஜூலை மாத இறுதியில் கார்பன் உமிழ்வை நிகர பூஜ்ஜியமாகக் குறைக்கும் இலக்கு சட்டமாக அறிவிக்கப்பட்டது.

ஆனாலும், இலக்குக்கு அதை அடைவதற்கு தேவையான நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கு இடையில் கணிசமான இடைவெளி காணப்படுவதாக இக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் காலநிலை மாற்றத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பல பகுதிகளில் லட்சியமான, விரைவான நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2030 -ஆம் ஆண்டுக்குள்பெற்றோல் மற்றும் டீசல் வாகனங்கள் படிப்படியாக வெளியேற்றப்பட வேண்டும் எனவும் கார்பன் பிடிப்பு தொழில்நுட்பத்தை விரைவில் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் எரிவாயுக் கொதி கலன்கள் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டுமெனவும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.