New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் இவர்களை பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனே கூறவும்

07/11/2019

கனடாவில் வைத்து, மாயமான வயோதிபர் மற்றும் இரண்டு சிறுவர்கள் பற்றி தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில், குறித்த நபர்களின் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், 70-வயது நிறைந்த Leo Easton (லியோ ஈஸ்டன்) என்பவர் அவரது இரண்டு பேர குழந்தைகளுடன் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இறுதியாக, உரிமம் தட்டு BVBP364 உடன் நீல போண்டியாக் மொன்டானா வேன் மூலம் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வயோதிப நபரின் அடையாளங்களாக பொலிஸார் கூறும்போது, ஐந்து அடி உயரம், 160 பவுண்டுகள் எடை கொண்ட தோற்றத்துடன், காக்கி ஷார்ட்ஸ் மற்றும் வெள்ளை காலணிகளை அணிந்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.