கனடா செய்திகள்
படகு கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு கனேடிய பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில்
08/01/2019படகு கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் கனேடிய பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த படகு விபத்து, நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றிருந்த நிலையில் இதில் சிக்கி ஒரு பெண் மற்றும் ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
RCMP,தகவலின் படி இதில் சிக்கிய நபர்களை விமானம் மூலம் தேடியதில் இருவர் உயிரிழந்த நிலையில் பெண் ஒருவர் மீட்கப்பட்டு சிகிக்சைக்காக மருத்துவமனையில் உள்ளார்.மேலும், இது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.