New year offer 2017

கனடா செய்திகள்

சிரிய ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 31 வீரர்கள் பலி

08/04/2019

சிரிய விமானப்படை தளத்தில் உள்ள ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 31 வீரர்கள் பலியாகியுள்ளனர்.

சிரியாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்ய படைகளும் இணைந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து வருபவர்கள் மீது அந்நாட்டு ராணுவம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதேவேளை 2011ஆம் ஆண்டு முதல் சிரிய அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான போரில் 37 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. கிளர்ச்சியாளர்களை வான்வெளி தாக்குதல் மூலம் ஒடுக்கும் பணியில், சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷாய்ரத் (Shayrat) விமானப்படை தளம் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

அங்கு தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 31 வீரர்கள் பலியானதாகவும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சிரிய மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஆயுதக்கிடங்கில் காலாவதியான வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை அகற்றும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.