கனடா செய்திகள்
2200 ஆண்டுகள் பழமையான நகரம்
08/05/2019எகிப்திய கலாச்சாரம் உலகின் மிகப் பழமையானதாக கருதப்படுகிறது. தற்போது எகிப்து நாட்டில் உள்ள ஹெராக்லியான் என்ற இடத்தில் 1200 ஆண்டுகள் பழமையான கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழங்காலத்தில் இந்நகரம் கோயில்களின் நகரம் என்று அழைக்கப்பட்டது (City of Temples). மேலும் இந்நகரம் ‘lost city of Atlantis in Egypt' என்றும் அழைக்கப்படுகிறது
கடலுக்கு அடியில் 1200 ஆண்டுகள் பழமையான கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலோடு நகைகள் மற்றும் நாயணங்கள் அடங்கிய கப்பல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் என்று தெரியவந்துள்ளது.
இதேபோல் பழங்கால கட்டிடங்கள், மண்பாண்டங்கள் ஆழ்கடலில் காணப்படுகின்றன. இவை 2200 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகிறது. எகிப்து மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒன்றாக சேர்ந்து இதை கண்டுபிடித்துள்ளனர்
மேலும் மூழ்கியிருக்கும் கோயில்கள் அருகில் கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல்களில் கி.பி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த செம்பு நாணயங்கள் மற்றும் நகைகள் இருந்துள்ளன. இந்த காலக்கட்டம் இரண்டாம் டோலமி மன்னனின் ஆட்சிக்காலம்
நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் இந்நகரம் கடலுக்கு அடியில் மூழ்கியதாக நம்பப்படுகிறது.