கனடா செய்திகள்
டொராண்டோவில் இந்த வாரம் வன்முறை தொடர்பில் 16 பேர் சுடப்பட்டனர்
08/06/2019டொராண்டோவில் இந்த வாரம் ர் பல்வேறு சம்பவங்களில் தொடர்புடைய வன்முறை தொடர்பில் 16 பேர் சசுடப்பட்டனர்.
இதில், நகரின் வட மேற்கு District 45, ஒன்றில் 100 பேர் கலந்து கொண்ட இரவு விடுதியில் ஏழு பேர் சுடப்பட்டனர்.
இதனை தொடர்ந்து. சர்ச் மற்றும் அடிலெய்ட் வீதிகளில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் லேசான காயங்களுடனும், மற்றொருவர் அதிக காயங்களுடனும் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.
லிபர்ட்டி வில்லேஜ் பகுதியில் நேற்று முன்தினம் மர்ம நபர் 12-முறை துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயகளுடன் உள்ளார்.
இதேபோன்று, டொரோண்டோ பகுதியில் வீடு ஒன்றில் புகுந்து பெண் உட்பட 9மற்றும் 5-வயது குழந்தை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.