New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் தீயணைக்கும் முயற்சியில் உயிரை விட்ட 32 வயது தீயணைப்பு வீரர்

08/06/2019

கனடாவில் தீயினை கட்டுப்படுத்தும் வேளையில் முயற்சியில் உயிரை விட்ட 32-வயது தீயணைப்பு வீரர்!

கனடாவில் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது தீயில் கருகி 32-வயது தீயணைப்பு வீரர் தனது உயிரை விட்டுள்ளார்.

கியூபெக்கின் வன தீயணைப்பு சேவை, மாகாணத்தின் அவுட்டாயிஸ் பிராந்தியத்தில் தீப்பிடித்த வேளையில் தீயினை அணைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்ட போது 32 வயதான தீயணைப்பு வீரர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.

குறித்த பகுதி ஒட்டாவாவில் இருந்து 50-கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும், இது குறித்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.