New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் நெடுஞ்சாலை 9 ல் விபத்து ஒருவர் உயிரிழப்பு மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் படுகாயம்

08/07/2019

கனடாவில் நெடுஞ்சாலை 9-ல்இடம்பெற்ற அதிபயங்கர மோதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஆறு பேர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

RCMP தகவலின் படி, குறித்த வாகன மோதல் மதியம் 2 மணிக்கு முன்பு மீடோடேல் சாலையில் நெடுஞ்சாலை 9 -ல் இடம்பெற்றுள்ளது.

இதில் சிக்கிய 78-வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 74-வயதுடைய பெண் சிகிசைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில், மூன்று குழந்தைகள் உட்பட 33 வயது, a 32- வயது பெண் ஆகியோர் அனைவரும் அதிக காயங்களுடன் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பில் தீவிரக் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.