கனடா செய்திகள்
கனேடிய விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள பொலிஸார்
08/08/2019கனேடிய விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
கனடாவின் யூகோனில் கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற விமான விபத்தில் இரண்டு கனேடியர்கள் உயிரிழந்திருந்தனர்.
இந்தநிலையில், குறித்த விபத்தில் 24 வயதான வைட்ஹார்ஸைச் சேர்ந்த ஷான் தோமஸ் கிச்சன் மற்றும் 33 வயதான வான்கூவரைச் சேர்ந்த ஜூலியா லேன் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்கான் ஏர் விமானம் தனது பயணத்தை ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.
விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.