New year offer 2017

கனடா செய்திகள்

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

08/09/2019

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் பரிசில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை IGPN (காவல்துறையினருக்கான காவல்துறை) அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.

இரண்டுமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பரிசில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் இந்த சம்பவத்தின் போது காவல்துறையினர் வன்முறையை பிரயோகித்து தம்மை கைது செய்ததாகவும் இதனால் தனது கரு சிதைவடைந்துள்ளதாகவும் குறித்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

12 ஆம் வட்டாரத்தில் தம்பதிகள் இருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றத்துக்காக அப்பெண் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை அப்பெண் விடுவிக்கப்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு கரு சிதைவு ஏற்பட்டதை மருத்துவர் உறுதி செய்துள்ளார். அதைத் தொடர்ந்தே அப்பெண் புதன்கிழமை காவல்துறையினர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.