கனடா செய்திகள்
டொராண்டோவில் கொடூரமான கொலை சம்பவம் தந்தை பலி மகன் படுகாயம்
08/11/2019கனடாவின் டொராண்டோவில் இடம்பெற்ற கொடூரமான கொலை சம்பவம் தொடர்பில் தந்தை பலியான நிலையில் மகன் காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார்.
இது தொடர்பில் அதி பயங்கர குறித்த துப்பாக்கி சூடு, கனடாவின் டொராண்டோ பகுதியில் நேற்று முன்தினம் பிற்பகல் 2:16 மணிக்கு ஏற்பட்டதாக பொலிஸாருக்கு பல அழைப்புகள் வந்தது.
இதில், சம்பவ இடத்திற்குஅவசரகால குழுவினர் விரைந்து வந்த பார்த்த போது, பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவரைக் கண்டுபிடித்ததாகவும், பின்னர் தொலைதூரத்தில் தேடிய பின்னர் இரண்டாவது பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடித்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான உயிரிழந்த குறித்த நபர் 29, வயதுடைய (Kevin Reddick) என்று அடையாளம் காட்டப்பட்டார். மற்றொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார்.