கனடா செய்திகள்
கனடாவில் வயோதிபரை துன்புறுத்தி கொலை செய்த நபர் பொலிசாரிடம் சிக்கினார்
08/26/2019கனடாவில் 74-, வயதுடைய வயோதிபரை துன்புறுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் 40-வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம், நேற்று இரவு 8 மணிக்குப் பிறகு ஓக்வில்லில் மரைன் டிரைவ் பகுதியில் சம்பவித்துள்ளது.
இது தொடர்பில், ஹால்டன் பிராந்திய பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் குற்றவியல் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட இருக்கிறார்.