கனடா செய்திகள்
கனடாவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து 2 வயோதிப பெண்கள் படுகாயம்
08/27/2019வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் பலத்த தீக்காயம் ஸ்காபரோவில் உள்ள வீடு ஒன்றின் பின் தரைப்பகுதியில் தளவாடங்கள் தீப்பற்றிக் கொண்டதில் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான இரண்டு பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து, பார்க் வீதி மற்றும் கெனடி வீதிப் பகுதியில் சம்பவித்துள்ளது. வீட்டின் பின்புறத்தில் உள்ள காணியில் சிறு தீ மூட்டி அவர்கள் உட்கார்ந்திருந்த வேளையில், தளவாடங்களில் தீப்பற்றிக் கொண்டது.
இதன்போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளானதாகவும்,
மேலும் ஒருவர் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நான்காவது நபருக்கு சம்பவ இடத்திலேயே சிகி்ச்சை அளிக்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அங்கிருந்த நீச்சல் தடாகத்தினுள் குதித்ததாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீப்பரவலை கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துவிட்டதாகவும், தீ விட்டுக்குப் பரவவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.