New year offer 2017

கனடா செய்திகள்

சீனாவில் இருந்து 13 சதவீத நிறுவனங்கள் வெளியேறும் அதிபர் டிரம்ப் தெரிவிப்பு

08/31/2019

திட்டமிட்டப்படி நாளை முதல் சீனப்பொருட்கள் மீதான கூடுதல் வரி விதிப்பு அமல் படுத்தப்படும் எனவும் இதனால் , 13 சதவீத நிறுவனங்கள் வெளியேறும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஓர் ஆண்டுக்கும் மேலாக வர்த்தகப்போர் நீடிக்கிறது.

இந்நிலையில் இரு நாடுகளிற்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாத காரணத்தால், இருநாடுகளும் பரஸ்பரம் வரி விதித்து பதிலடி கொடுத்து வருகின்றன.

3 தினங்களுக்கு முன்பு, வர்த்தகப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா தயாராக இருப்பதாக அந்நாட்டின் துணை பிரதமர் லியூ ஹீ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனாவுடனான பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டு இருப்பதாக கூறியிருந்தார்.

அதோடு வர்த்தகப் போர் விவகாரத்தில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள சீனா விரும்புகிறது என்ற அவர், ஆனாலும் திட்டமிட்டபடி நாளை முதல் சீனா பொருட்கள் மீதான கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வரும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 13 சதவீத நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறும் என்றும் , இந்த வரி விதிப்பின் மூலம் அமெரிக்காவுக்கு கோடிக்கணக்கான டாலர் வருவாய் கிடைக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனது நாணயமான யுவான் மதிப்பை குறைத்ததன் வாயிலாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனா, வெளியில் இருந்து அதிக விலைக்கு பொருட்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் சுட்டிகாட்டியுள்ளார்.

மேலு ம் இந்த வர்த்தக போரில் அமெரிக்கா தான் வெற்றிபெறப் போகிறது என்றும், டிரம்ப் கூறியுள்ளார்.

இதேவேளை சீன இறக்குமதி பொருட்களுக்கான வரி விகிதம் 10-ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படும் என அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கடந்த செவ்வாயன்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது