கனடா செய்திகள்
கனடாவில் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திய குற்றவாளியை உங்களுக்கு தெரியுமா
08/31/2019கனடாவின், ஸ்காபரோவில் வைத்து பெண் ஒருவரைக் கத்தியால் குத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 23 வயது ஆண் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்கு, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர், ரொறன்ரோவைச் சேர்ந்த 23 வயதான டாசெல் டிக்கோஸ்ட்டா ஹென்றி என்பவர் எனவும் அடையாளம் வெளியிட்டுள்ளனர். அத்துடன் குறித்த அந்த நபர் ஆயுதங்களுடன் நடமாடக்கூடிய ஆபத்தானவராக இருக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், குறித்த ஆணின் ஒளிப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், இவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
விக்டோரியா பார்க் அவனியூ மற்றும் எல்ஸ்மேரே வீதிப் பகுதியில் உள்ள துரித உணவகம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்திற்கு இருவரும் சென்றதாகவும், மோதல்கள், வாக்குவாதங்கள் எவையும் இடம்பெறாத நிலையில், குறித்த அந்த நபர் பெண்ணைக் கத்தியால் குத்தியதாகவும், அதனை அடுத்து அந்த நபர் அங்கிருந்து கால்நடையாகத் தப்பியோடிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவித்துள்ளனர்.