New year offer 2017

கனடா செய்திகள்

மெக்சிகோ பார் தீ விபத்து பலியானோர் எண்ணிக்கை உயர்வு

09/01/2019

மெக்சிகோ நாட்டின் வெராகுரூஸ் மாநிலத்தில் கோட்சாகோல்காஸ் துறைமுக நகரில் எல் காபலோ பிளான்கோ என்ற பார் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி பாரில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 8 பெண்கள், 15 ஆண்கள் என மொத்தம் 23 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியானார்கள்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அதோடு இந்த தீ விபத்தில் , 13 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7 பேர் பலியாகியுள்ள நிலையில்,இந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.