கனடா செய்திகள்
கனடா ரெக்ஸ்டேல் பகுதியில் தீ்பபரவல்
09/02/2019கனடா ரெக்ஸ்டேல் பகுதியில் அமைந்துள்ள வாகன திருத்துமிடம் ஒன்றில் தீ்பபரவல் சம்பவித்துள்ளது.
நெடுஞ்சாலை 27ற்கு அருகே, அல்பியன் வீதியில் அமைந்துள்ள குறித்த அந்த வாகன திருத்தக கட்டிடத்தில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகவும், குறிப்பாக அங்கு வெடிப்புச் சத்தங்களுடன் தீ பரவியதாகவும் ரொரன்ரோ தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில் அங்கே குறித்த அந்தக் கட்டிடத்தின் பின்புறம் ஊடாக பெருமளவு கரும்புகை வெளியேறியவாறு காணப்பட்டதாகவும், உள்ளே ஒரு வாகனமும் எரிந்துகொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
துரிதமாக செயற்பட்ட தீயணைப்புப் படையினர் சிறிது நேரப் போராட்டத்தின் பின்னர் தீப்பரவலைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தனர்.