கனடா செய்திகள்
கனடாவின் பீல் பிராந்தியத்தில் 17 வது படுகொலை நடந்தது
09/04/2019கனடாவின் பீல் பிராந்தியத்தில் இடம்பெற்ற, கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் 88 வயது வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, குறித்த பகுதியில் 17 -வது படுகொலை சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில், 52-வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக குற்றவியல் பிரிவினருக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வயோதிபர் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
இது தொடர்பில், குறித்த சம்பவம் மாலை 6:15 மணியளவில் ஹெல்பி கிரசண்ட் மற்றும் வில்லோபேங்க் பாதையில் நடந்தது.