New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் தாயினை துன்புறுத்தி கொலை செய்த மிசிசாகா நபர் கைது

09/05/2019

கனடாவில் தாயினை துன்புறுத்தி கொலை செய்த 52-வயதுடைய மிசிசாகா நபர், இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம், கனடாவின் ஷெல்பி கிரசண்ட், டொம்கன் சாலை மற்றும் ஈஸ்ட்கேட் பார்க்வே அருகே, மாலை 6:15 மணியளவில் அவரது வீட்டில் சம்பவித்துள்ளது.

இதில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், 88-வயதுடைய பெண் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்த்தனர்.

இதில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொலை செய்த குறித்த நபர் 52-வயதுடைய (Mariantonia Biunno) என்று அடையலாம் காட்டப்பட்டுள்ளார். இதையடுத்து, குறித்த பகுதியில் 17-வது கொலை சம்பவமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.