கனடா செய்திகள்
வடகொரியாவில் வீசிய சக்திவாய்ந்த சூறாவளியால் மூவர் பலி
09/08/2019வடகொரியாவை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் , ஐவர் காயமடைந்துள்ளதாகவும் அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக ஏராளமான மரங்கள் சாய்ந்துவிட்டதாகவும் பல விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டும் உள்ளதாககவும் தெரிவிகபடுகின்றது.
அத்துடன் அங்கு 161,000 க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக வடகொரிய உள்துறை, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
இந்த நிலையில் சூறாவளியைத் தொடர்ந்து வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்றும் வடகொரிய வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது.
மேலும் நாடு முழுவதும் இன்று பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வடகொரிய வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.