New year offer 2017

கனடா செய்திகள்

ரணிலுக்கும் சஜித்திற்கும் இடையில் உடன்பாடு

09/08/2019

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எந்த வகையிலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்பது தனக்கு தெரியும் எனவும், அவர் தற்போது செய்து வரும் வேலைகளால் சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவு மேலும் அதிகரிக்கும் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன், தலைவர் ரணில் சஜித்துடன் உடன்பாடு எதனையும் செய்துக் கொண்டிருப்பாரோ என்ற சந்தேகம் தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ள அரங்கில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

சஜித் பிரேமதாச மீது நம்பிக்கை உள்ளது. நான் எப்போதும் கூறுவது போல், சஜித் 25 ஆண்டுகளாக அரசியல் அனுபவம் உள்ளவர்.

1994ஆம் ஆண்டு முதல் சஜித் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு சிறந்த அரசியல் அனுபவம் உள்ளது. அவருக்கு தற்போது 52 வயது. இன்னும் 20 ஆண்டுகள் வரை உத்தரவாதம் உள்ளது.

நான் இப்படி கூறும் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் சில சிரேஷ்ட உறுப்பினர்கள் நான் அவர்களை கேலி செய்வதாக கூறியுள்ளனர்.

நான் கோத்தபாயவுக்கே 70 வயது என்று சொன்னேன். எவரும் தமது தலையில் தொப்பிகளை போட்டுக்கொள்ள தேவையில்லை.

இதுவும் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் விளையாட்டோ என்ற பெரிய சந்தேகம் எனக்கு இருக்கின்றது.

அவர் போட்டியிட மாட்டார் என்பது எனக்கு தெரியும். தலைவர் ரணில் விக்ரமசிங்க சஜித் பிரேமதாசவுடன் உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளாரோ என்ற சந்தேகமும் உள்ளது.

இதனால், ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய என அனைவரும் இணைந்து சஜித் பிரேமதாசவை வேட்பாளராக அறிவிப்பார்கள்.

அதுவரை நாங்கள் இந்த போராட்டத்தை கைவிட மாட்டோம் எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.