கனடா செய்திகள்
கனடாவில் மாயமான பெண் தொடர்பில் பொலிஸார் அறிக்கை
09/14/2019கனடாவில், இரண்டு வாரங்களுக்கு முன்பு மாயமான 13-வயது பெண் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த, அட்ரியன் டோரியன் என்ற பெண் கடைசியாக ஆகஸ்ட் 24 அன்று காலை 10:30 மணிக்கு காணப்பட்டார்.
குறித்த பெண் தொடர்பில் அடையாளங்களாக பொலிஸார் கூறும்போது, ஐந்து அடி உயரம், 115 பவுண்டுகள், நடுத்தர நீள சிவப்பு முடி, பழுப்பு நிற கண்கள் மற்றும் கண்ணாடி அணிந்திருப்பார்.
மேலும், குறித்த பெண் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 204-986-6250 என்ற இலக்கு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.