New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவின் வாகன தரிப்பிடம் ஒன்றில் துப்பாக்கி பிரயோகம் ஒருவர் படுகாயம்

09/15/2019

ரெக்ஸ்டேலில் ஒரு பிஸியான பிளாசாவின் முன் உள்ள வாகன தரிப்பிடத்தில் முன்பாக நபர் ஒருவர்

வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பல முறை சுடப்பட்டதால் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார்.

பிற்பகல் 2:30 மணிக்கு முன்பு, Islington Avenue and Rexdale Boulevard. பகுதியில் உள்ள பிளாசாவின் முன் உள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தியிருந்த காரில் இருந்த நபர் மீது குறி வைத்து பல முறை துப்பாக்கியால் சுட்ட பின் சந்தேக நபர் அங்கிருந்து அதி இஸ்லிங்டன் அவென்யூவில் தெற்கு நோக்கி தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவ இடத்திட்க்கு விரைந்த பொலிஸார் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆண் ஒருவர் சம்பவ இடத்தில் காணப்பட்டார். துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி பொலிஸார் கூறுகையில், சந்தேக நபர் வேகமாக வாகனத்திற்குள் இருந்த நபர் மீது பல முறை துப்பாக்கியால் சுட்ட பின் சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

பின்னர், காயம்அடைந்த நபர் உதவி பெற அருகிலுள்ள கடைக்குச் சென்றதாகவும், தோட்டாக்களால் சிதைக்கப்பட்ட ஒரு வாகனம் வாகன நிறுத்துமிடத்தில் உள்ளது.

சுடப்பட்ட தூப்பாக்கி ரவைகள் அவ்விடத்தில் உள்ளதாக தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளோம், பொலிஸார், தடயவியல் அதிகாரிகள் ஆதாரங்களுக்காக காட்சியைத் தேடுகிறார்கள்.

தகவல் உள்ள எவரும் புலனாய்வாளர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றனர்.