New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் களைகட்டும் சீனர்களின் டிராகன் திருவிழா

09/16/2019

கனடாவின் டொரன்டோவில் சீனர்களின் டிராகன் திருவிழா வெகு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

வசந்த காலத்தின் மத்தியில் கொண்டாடப்படும் டிராகன் திருவிழாவுடன் இந்த ஆண்டு சீனாவின் 70-வது நிறுவன தினமும் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி கனடாவில் உள்ள மிகப்பெரிய நகரான டொரன்டோவில் உள்ள சீன தூதரகத்தை அணுகிய சீனர்கள், விழாவைக் கொண்டாட அரசு மைதானத்தில் ஏற்பாடு செய்தனர்.

3 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் ஐ லவ் சீனா என்ற தேசப்பற்றுப் பாடல் பாடப்பட்டது. இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

கண்கவர் வண்ணத்தில் நடத்தப்பட்ட ட்ரோன்களின் சாகசமும், 70 ஆண்டு கால சீனர்களின் சாதனைகளை விளக்கும் வகையில் நடத்தப்பட்டன.