கனடா செய்திகள்
உயிரிழந்த கனேடிய இளைஞன் தொடர்பில் கிடைத்துள்ள முக்கிய ஆதாரம்
09/16/2019கனடாவின், கிங்ஸ்டன் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது, பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் அடையாளங் காணப்பட்டுள்ளார்.
உயரிழந்த 22 வயதான இளைஞன், ஈவன் ஃபிறீமன் எனவும், அவரது குடும்பத்தினரின் அனுமதியுடன் அடையாளம் வெளியிடப்படுவதாகவும் ஒன்ராறியோ மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குயிண் வீதி மற்றும் பாகொட் வீதிப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை, பிற்பகல் 2 மணியளவில் 40 வயது ஆண் ஒருவரை 22 வயது ஆண் ஒருவர் தாக்கியுள்ளார்.
இதன்போது 40 வயதான ஆண் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாருக்கும், 22 வயதான இளைஞனுக்கும் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் போது, பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் குறித்த இளைஞனை சுட்டதாகவும், பின்னர் அந்த இளைஞன் கத்தி ஒன்றின் மூலம் தன்னைத் தானே தாக்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இரண்டாவது பொலிஸார் உத்தியோகத்தர் மின் அதிர்ச்சி ஆயுதத்தை பயன்படுத்தியதாகவும் தெரிய வருகின்றது. இதன்போது குறித்த இளைஞனும் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.