கனடா செய்திகள்
கனடாவின் மார்க்கம் பகுதியில் பல்வேறு வாகனங்கள் மோதல் ஒருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயம்
09/19/2019கனடாவின், மார்க்கம் பகுதியில் பல்வேறு வாகனங்கள் தொடர்புபட்ட மோசமான விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து நைன்த் லைன் மற்றும் நெடுஞ்சாலை 7 பகுதியில், நேற்று மாலை நான்கு மணியளவில் சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் சிக்குண்ட இரண்டு வெவ்வேறு வாகனங்களின் சாரதிகள் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
இதில், ஒருவர் உயிரிழந்துவிட்ட நிலையில், மற்றையவர் உயிராபத்தான நிலையில் உள்ளதாகவும், மேலும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக யோர்க் பிராந்திய பொலிஸார், தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.