கனடா செய்திகள்
கனடா வந்த இலங்கை வாலிபருக்கு நேர்ந்த கதி உடலை பார்த்து கதறும் உறவுகள்
09/20/2019கனடாவின் ஸ்கார்பாரோவில், நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இலங்கை இளைஞர் தொடர்பில் அவரது உறவினர்களும் நண்பர்களும் அடையாளம் கண்டுள்ளனர்.
ரொறான்ரோவின் மிடில்ஃபீல்ட் சாலை மற்றும் மெக்னிகால் அவென்யூ பகுதியில் உள்ளூர் நேரப்படி சுமார் 10 மணியளவில் பொலிசாருக்கு அவசர தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார் துப்பாக்கி குண்டுக்கு இரையாகி குற்றுயிராக கிடந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக தெரிவித்தனர் .
தற்போது, கொல்லப்பட்ட இளைஞர் இலங்கையை சேர்ந்த 25 வயதான சாரங்கன் சந்திரகாந்தன் எனவும், குறித்த தகவலை அவரது பெற்றோரும் நண்பர்களும் நேற்று உறுதி செய்துள்ளனர்.
சந்திரகாந்தனின் மறைவு அவரது குடும்பத்தாரையும் நண்பர்களையும் உலுக்கியுள்ளது. இந்த விவகாரம்தொடர்பில், மேலதிக தகவல் எதையும் வெளியிட மறுத்துள்ள பொலிசார், விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிய வரும் பொது மக்கள் பொலிசாரை நாடவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.