கனடா செய்திகள்
கனடா நாட்டில் பொது வீதியில் கட்டிப்புரண்ட இரண்டு கரடிகள் இணையத்தில் வைரல்
09/23/2019கனட நாட்டில் இரு கரடிகள் சாலையில் மூர்க்கமாக சண்டையிட்டுக்கொள்ளும் காணொளி சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.
கனடாவைச் சேர்ந்த கேரி மெக்கிலிரே என்பவர், அங்குள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண சாலையில் சென்று கொண்டிருந்த போது, இரு கரடிகள் ஒன்றுக்கொண்டு சண்டையிட்டுக்கொள்வதைக் கண்டு காணொளி எடுத்துள்ளார்.
அந்த காணொளியை அவர் ஃபேஸ்புக் பகிர்ந்ததையடுத்து, பலரது கவனத்தையும் அது ஈர்த்துள்ளது. சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிடும் கரடிகளை அவ்வழியாக சென்ற நரி ஒன்று வேடிக்கை பார்ப்பதும் அந்த காணொளி பதிவாகியுள்ளது.