New year offer 2017

கனடா செய்திகள்

கனடா வந்த இலங்கை வாலிபர் கொல்லப்பட்ட சம்பவம் கொலையாளி சிக்கினார்

09/24/2019

கனடாவில் துப்பாக்கிச்சூட்டில் இலங்கை இளைஞர் ஒருவர் பலியான வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் ஸ்கார்பரோவில் நடந்த துப்பாக்கிச்சூடு ஒன்றின்போது, வாகனம் ஒன்றிற்குள் ஒரு இளைஞர் குண்டுக்காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவரை மீட்க அவசர உதவிக்குழுவினர் எடுத்த முயற்சி வெற்றிபெறாமல், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது பெயர் சாரங்கன் சந்திரகாந்தன் என்பதாக தெரியவந்துள்ள நிலையில், பொலிசார் அந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக மேலும் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அதாவது சாரங்கன் சந்திரகாந்தன் உயிரிழந்த அதே இடத்தில், மற்றொரு நபரும் குண்டுக்காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர் மோசமாக காயமடைந்திருந்தாலும் அவருக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் Stoufville நகரைச் சேர்ந்த 22 வயதான சரண்ராஜ் சிவகுமார் என்ற இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், நேற்று Toronto பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது . சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சரண்ராஜ் மீது இரண்டு குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ள நிலையில் நேற்றையதினம் அவர் நீதிமன்றில் முன்நிலைப்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.