New year offer 2017

கனடா செய்திகள்

தமிழகத்திற்கு சுற்றுலா வந்த கனேடிய பெண்ணை அச்சுறுத்திய குதிரையோட்டி கைது

09/25/2019

சுற்றுலா நோக்கில் இந்தியாவுக்கு சென்றிருந்த கனடா பெண்ணொருவர் குதிரையில் சவாரி செய்த போது கீழே வீழ்ந்து காயங்களுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் சென்னை மெரினா கடற்கரையில் குதிரையில் சவாரி செய்து கொண்டிருந்த போது பிறிதொரு குதிரையோட்டி தன்னை அச்சுறுத்தியதாகவும், இதனை தான் பயணித்த குதிரை மிரண்டு போய் தன்னை கீழ் தள்ளிவிட்டு ஓடியதாக அவர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

இந்த குதிரையை வைத்து கனடா பெண்ணை அச்சுறுத்தியதாக கூறப்படும் குதிரை ஓட்டியான செந்தில் என்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடா நாட்டை சேர்ந்த டொய்னா கட்டான என்ற பெண் நேற்று இரவு குதிரை சவாரி செய்து கொண்டிருந்த போது மற்றொரு குதிரையில் வந்த குதிரை ஓட்டி தன் குதிரையால் கனடா பெண்ணின் குதிரையை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிரண்டு ஓடிய குதிரையின் மீது இருந்த பெண் நிலை தடுமாறி கீழே வீழ்ந்ததில் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.