New year offer 2017

கனடா செய்திகள்

கனடா நாட்டில் காதலியை அசர வைக்க காதலர் கொடுத்த வியவைக்கும் பரிசு

09/26/2019

கனடா நாட்டில் ஒருவர் தனது காதலிக்கு வைர மோதிரத்தில் கேரட்டை வளர்த்து காதல் பரிசாக கொடுத்து அசர வைத்துள்ளார்.

கனடாவை சேர்ந்தவர்கள் ஜான் நிவெல்லி மற்றும் டீஜே ஸ்குரிஸ் ஆகியோர் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். மேலும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள்.

ஜான் நிவெல்லி மற்றும் டீஜே ஸ்குரிஸ்க்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கனடாவில் உள்ள ஒரு மருத்துவமனை ஆய்வகத்தில் ஸ்குரிஸ் வேலை செய்து வருகிறார்.

ஆண் தேவதை ஸ்டைலில் நிவெல்லி வீட்டில் இருந்த படி குழந்தைகளை பார்த்துக்கொள்கிறார். நிவெல்லி தனது வீட்டில் தோட்டம் அமைத்து நிறைய தாவரங்களை வளர்த்து வருகிறார். அது அவரது மிகப்பெரிய பொழுது போக்கு.

மேலும், குழந்தைகளையும், காதலியையும் மிக அன்பாக பார்த்துக் கொள்வார் நிவெல்லி. இந்நிலையில், காதலியை மனைவியாக்க வேண்டும் எனும் ஆசை நிவெல்லிக்கு வந்தது.

இதையடுத்து, ஏற்கனவே வாங்கி வைத்திருந்த வைர மோதிரத்தை ஸ்குரிசிடம் கொடுத்து திருமணத்திற்கு புரொபோஸ் செய்ய நிவெல்லி முடிவு செய்தார். ஆனால், அவர் அதனை அப்படியே கொடுக்கவில்லை.

வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த நிவெல்லி, அந்த மோதிரத்தில் ஒரு கேரட்டை வளர்த்து ஸ்குரிஸ்க்கு பரிசளிக்க முடிவு செய்தார்.

இதையடுத்து, அவர் ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் மோதிரத்தை மண்ணில் புதைத்து, கேரட் விதைகளை தூவி வளர்க்க ஆரம்பித்தார். சரியாக 90 நாட்கள் கழித்து காதலி மற்றும் மகனை அழைத்து அந்த கேரட்டை அறுவடை செய்ய சொன்னார்.

வைர மோதிரத்துடன் கேரட் வளர்ந்திருப்பதை பார்த்து ஸ்குரிஸ் ஆச்சரியமடைந்தார். அந்த நேரத்தில் நிவெல்லி சினிமா ஹீரோ போல் தரையில் மண்டியிட்டு ஸ்குரிசிடம் புரொபோஸ் செய்தார். ஸ்குரிஸ்க்கு இது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.