கனடா செய்திகள்
கனடாவில் பேருந்து ஒன்றில் கைத்துப்பாக்கியுடன் வளம் வந்த நபர் வலைவீசி தேடும் பொலிஸார்
09/26/2019கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் TTC பேருந்தில் கைத்துப்பாக்கியுடன் காணப்பட்ட நபர் ஒருவரின் கண்காணிப்பு ஒளிப்பதிவு படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், அவரைத் வலைவீசி தேடிவருவதாக தெரிவித்துள்ளனர்.
கனடாவின் கிரேடன் ஹால் டிரைவ் மற்றும் கிரேடன் ஹால் பகுதியில் பேருந்தினுள் கைத்துப்பாக்கியுடன் காணப்பட்ட அவர், அந்தப் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்துமிடம் ஒன்றில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த நபர், கைகளில் பெருமளவில் பச்சை குத்தியிருந்ததாகவும், இடது கையில் ஒரு பூவின் படம் பச்சை குத்தப்பட்டிருந்ததாகவும் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அந்த நபர் ஆயுதத்துடன் நடமாடக்கூடும் என்பதால் ஆபத்தானவர் என்றும் தெரிவித்துள்ள அதிகாரிகள், அவர் தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.