கனடா செய்திகள்
கனடாவில் நேருக்கு நேர் மோதிய இரண்டு வாகனங்கள் ஒருவர் பலி
09/30/2019கனடாவின், ஸ்கார்பாரோவில் இரண்டு வாகனங்கள் மோதியதைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 60 வயதில் ஒருவர் மருத்துவமனையில் இறந்துள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கென்னடி சாலை மற்றும் செயின்ட் கிளெய்ர் அவென்யூ கிழக்கு பகுதியில் நேற்று இரவு ஒரு கார் மற்றும் ஒரு எஸ்யூவி மோதியதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்தனர்.
அவசரகால குழுவினர் வந்தபோது, ஒரு நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அவருக்கு துணை மருத்துவர்களும் உயிர்காக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பின்னர் அவர் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்,அங்கு சிகிசசை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு நபர் சிறிய காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக துணை மருத்துவர்களும் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் தெரியவில்லை.விசாரணைக்காக பொலிசார் சந்திப்பை மூடிவிட்டனர்.பின்னர் மீண்டும் சாலை திறக்கப்பட்டது.