கனடா செய்திகள்
சுற்றுலா வந்த கனேடியருக்கு தான்சானியா நாட்டில் நேர்ந்த கதி
09/30/2019தான்சானியா நாட்டிலுள்ள கிளிமாஞ்சாரோ மலைப் பகுதிக்கு சுற்றுலா வந்த கனேடியர் ஒருவர் பாராக்லைடிங் சாகசத்தில் ஈடுபட்டவேளையில், கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவர், தனது பாராசூட் இயங்காததால் மலை உச்சியிலிருந்து தவறி கீழே விழுந்த வேளையில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அமைந்துள்ள கிளிமாஞ்சாரோ மலைப்பகுதி முன்னணி சுற்றுலா தலமாக விளங்கி வரும் நிலையில் உலகெங்கிலும் இருந்து ஏராளமானோர் இங்கு வந்து மலையேறுவதும், பாராக்லைடிங் சாகசத்தில் ஈடுபடுவதும் வழக்கம்.
அந்த வகையில், கனடாவைச் சேர்ந்த ஜஸ்டின் கைலோ என்ற சுற்றுலா பயணி, மலை உச்சியில் பாராக்லைடிங் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, தரையிறக்கும் முயற்சியாக தான் அணிந்திருந்த பாராசூட்டை அவர் இயக்கியுள்ளார். ஆனால் தக்க சமயத்தில் பாராசூட் இயங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், பிடிமானத்தை இழந்த அவர், சுமார் 20 ஆயிரம் அடி உயரமுள்ள மலை உச்சியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.