New year offer 2017

கனடா செய்திகள்

எதிர்காலத்தில் கணிக்க முடியாத அச்சுறுத்தல் ஏற்படும் இராணுவ தளபதி எச்சரிக்கை

10/01/2019

எதிர்காலத்தில் வழக்கத்திற்கு மாறாக, கணிக்க முடியாத அச்சுறுத்தல்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்ட இராணுவத்தளபதி, படையினர் முன்னிலையில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்,

புதிய அச்சுறுத்தல்களின் பரிமாணங்களை நாம் அடையாளம் காண வேண்டும்.

மேலும், எங்கள் வீரர்களின் உடல் தகுதி, மன உறுதி மற்றும் கருத்தியல் விழிப்புணர்வை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதுடன் அவர்களின் போர்த்திறனை மேம்படுத்த வேண்டும்.

எதிர்காலத்தில் வழக்கத்திற்கு மாறாக கணிக்க முடியாத அச்சுறுத்தல்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது வெளிப்படையான உண்மை.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் இல்லாத நிலையில், பாதுகாப்புக் தொடர்பில் கவனிக்காமல் இருப்பது இயல்பு.

ஆயினும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு மூலோபாயம் இல்லாது போனால், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைப் போலவே பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.

எனவே,தேசிய பாதுகாப்பு எப்போதுமே ஒரு செயல்திறன்மிக்க மற்றும் செயல்பாட்டு பொறிமுறையின் மூலம் கவனிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.