கனடா செய்திகள்
நெடுஞ்சாலை 406இல் அதிபயங்கர விபத்து கனேடியர் இருவர் உயிரிழப்பு
10/03/2019கனடாவின், செயின்ட் கேதரைன்ஸில் நேற்று அதிகாலை தவறான வழியில் பயணித்த போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து, க்ளென்டேல் அவென்யூ அருகே நெடுஞ்சாலை 406 இல் அதிகாலை 1 மணிக்குப் பிறகு ஏற்பட்டது.
OPP Sgt. கெர்ரி ஷ்மிட் ஒரு வாகனத்தின் ஓட்டுநர் நெடுஞ்சாலையின் வடக்குப் பாதையில் தெற்கு நோக்கி பயணிப்பதை உறுதிப்படுத்தினார்.
சரியான வழியில் செல்லும் வாகனம் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த வாகனத்தில் இருந்த இருவர் சம்பவ இடத்தில் இறந்ததாக ஷ்மிட் கூறினார்.
விபத்தில் இறந்தவர்கள் ஒரு ஆண் மற்றும் பெண் என்று நம்பப்படுகிறது. அதிகாரிகள் அடுத்த உறவினர்களுக்கு அறிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தவறான திசையில் பயணித்த வாகனத்தை இயக்கி வந்த 24 வயதான வெல்லண்ட் நபர் தற்போது மருத்துவமனையில் உயிராபத்து அற்ற நிலையில் உள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும், குறித்த விபத்து தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.