New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் விபத்தில் படுகாயமடைந்த இருவரின் உடல் நிலையில் முன்னேற்றம்

10/05/2019

கனடாவின், பிக்கறிங் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த இருவரின் உடல்நிலை தற்போது, தேறி வருவதாக மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து, பேஃலி வீதிக்கு தெற்கே புரோக் வீதி மற்றும் டிலிங்ஹாம் வீதிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துடன் தொடர்புடைய வாகனம் ஒன்றின் சாரதி சம்பவ இடத்திலிருந்து கால்நடையாக தப்பிச் சென்றுவிட்ட நிலையில், அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விபத்து குறித்த தீவிர விசாரணைகளை டூர்ஹம் பிராந்திய பொலிஸார், தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.