New year offer 2017

கனடா செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு 4 பேர் பலி

10/06/2019

அமெரிக்காவின் கான்சாஸில் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகிவிட்டனர். கான்சாஸ் நகரில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு டெக்யூலா கேசி பாரில் மர்மநபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அப்போது அங்கிருந்த 4 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இன்னும் பிடிபடவில்லை. அவர் யார், எதற்காக இதை செய்தார் என தெரியவில்லை.

அமெரிக்காவில் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடைபெறுவது மக்களை அச்சமடைய செய்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.