New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் சூடு பிடிக்கும் தேர்தல் பிரசாரத்தில் சர்சையை கிளப்பிய சுவரொட்டி

10/07/2019

கனடாவில் வரும் 21 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், லிபரல் கட்சி மற்றும் கொன்சவேட்டிவ் கட்சிகளுக்கு இடையில் பெரும் போட்டி நிலவும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, தேர்தல் பிரசார பணிகளை ஆரம்பித்துள்ள இரு வேறு கட்சிகளும் மக்களுக்கு பல்வேறு வகையான திட்டங்களை அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், பியர்ஃபோண்ட்ஸ்-டொலர்டில் உள்ள கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளர் மரியம் இஷாக், யூத-எதிர்ப்பு சுவரொட்டிகளால் குழப்பமடைந்துள்ளார்.

அவரது பிரச்சார அறிவிப்புகளின் மீது யூத எதிர்ப்பு குறியீடுகள் தொடர்ச்சியாக ஒட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் ஆறு தேர்தல் வெற்றிகளை தவறவிட்ட காழ்ப்புணர்ச்சியால் சில எதிர்தரப்பு விஷமிகளால் தான் ஏன் குறி வைக்கப்படுகிறார் என்று தனக்கு தெரியாது என்று மரியம் இஷாக் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, அவரின் தேர்தல் பிரசார பதாதைகளின் மேலாக ஹிட்லரின் சுவஸ்டிகா இலட்சினைகள் வரையப்பட்டிருந்தன. அதேவேளை, பிறிதொரு பதாதையின் மீது கனடாவின் பெயர் வெட்டப்பட்டு அங்கு இஸ்ரேலின் பெயர் பொறிக்கப்பட்ட சுவரொட்டியொன்று ஒட்டப்பட்டிருந்தது.

அந்த சம்பவத்தில் நன்கு அறியப்பட்ட யூத எதிர்ப்பு இணைய நினைவுச் சின்னமும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

எகிப்தைச் சேர்ந்த காப்டிக் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த மரியம் இஷாக் கூறுகையில், தனது எதிர்ப்பாளர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியவில்லை எனவும், ஆதரவாளர்களிடமிருந்து வரும் ஆறுதலான வார்த்தைகளிலிருந்து மனதை தேற்றிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அவரது பிரசார பதாதைகளின் மீது ஒட்டப்படும் காழ்ப்புணர்ச்சிமிக்க சுவரொட்டிகள் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.