New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் நெடுஞ்சாலை 401இல் கோர விபத்து பொது மக்களின் உதவி கோரிய பொலிஸார்

10/17/2019

கனடாவின் நெடுஞ்சாலை 401இல் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பாக, ஒன்ராறியோ மாகாண பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

நெடுஞ்சாலை 401இல் இடம்பெற்ற வீதி விபத்தினை நேரில் கண்டோர் அல்லது வாகன ஒளிப்பதிவு சாதனத்தில் அது குறித்த பதிவுகளைக் கொண்டுள்ளோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு, பொலிஸார் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

நெடுஞ்சாலையின் மேற்கு நோக்கிய வழித்தடத்தில் இருந்து இஸ்லிங்டன் அவனியூவுக்கு வெளியேறும் பகுதியில், இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இவ்விபத்து குறித்த மேலதிக தகவல்களை வெளியிடாத பொலிஸார், இதுகுறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.