New year offer 2017

கனடா செய்திகள்

கனேடிய பொதுத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஜஸ்டின் ட்ரூடோ

10/22/2019

கனேடிய நாடாளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 65 வீத வாக்குகளுடன் வெற்றி பெறும் நிலையில் இருப்பதாக ரொறன்ரோ ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

கனடா பொதுத் தேர்தலில் விறு விறுப்பாக வாக்குப்பதிவுகள் நடந்து வரும் நிலையில் யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கனடாவில் இந்தமுறை ஆட்சியில் இருக்கும் லிபரல் கட்சிக்கும் எதிரணியான கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே கடுமையான போராட்டம் இருக்கும் என தேர்தல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

ஆட்சியமைக்க 170 தொகுதிகளை கைப்பற்ற வேண்டிய சூழலில் கடந்த முறை 177 தொகுதிகளை கைப்பற்றி Justin Trudeau தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சியை கைப்பற்றியது.

ஆனால், இந்த முறை இரு கட்சிகளும் ஆட்சியை கைப்பற்றும் சாத்தியம் இல்லை எனவும், தலா 129 தொகுதிகளை மட்டுமே இரு கட்சிகளும் கைப்பற்றும் என அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2015 தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்காபரோ ரூஸ் பார்க் தொகுதியிலேயே லிபரல் கட்சி சார்பில் மீண்டும் ஹரி ஆனந்தசங்கரி போட்டியிட்டிருந்தார்.

196 தேர்தல் அறிக்கைகளில், 44 அறிக்கைகள் வெளியான நிலையில் ஹரி ஆனந்த சங்கரி தெளிவான பெரும்பான்மையுடன் முன்னிலை வகிக்கிறார். அவருக்கு 65 வீத வாக்குகள் கிடைத்துள்ளன.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேட்டிவ் கட்சியின் பொப்பி சிங் 19 வீத வாக்குகளையே பெற்றுள்ளார். இதையடுத்து, புதிய ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு 10 வீதமும், கிறீன் கட்சி வேட்பாளருக்கு 4 வீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

கடந்த முறை ஹரி ஆனந்தசங்கரி இதே தொகுதியில் 60 வீத வாக்குகளையும், கொன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் 27 வீத வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

அதேவேளை, கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி பெரும்பான்மை பலத்தை இழக்கின்ற போதும், அதிகளவு ஆசனங்களுடன் முன்னிலை வகித்து வருகிறது.