New year offer 2017

கனடா செய்திகள்

ஆர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஆல்பர்ட்டோ ஃபெர்னாண்டஸ்

10/28/2019

ஆர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஆல்பர்ட்டோ ஃபெர்னாண்டஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆர்ஜென்டினாவில் நேற்றையதினம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது.

இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 45 வீத வாக்குகளைப் பெற வேண்டிய நிலையில், அல்பெர்டோ பெர்ணான்டஸ் 48 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, தற்போதைய ஜனாதிபதியான மொரிசியோ மெக்ரி 40 வீத வாக்குகளை பெற்று தோல்வியடைந்துள்ளார்.

இந்த நிலையில், வெற்றி பெற்றுள்ள அல்பெர்டோ பெர்ணான்டஸ் எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.